விளையாட்டு

வெற்றியோடு தொடங்கப்போவது யார்? : சென்னை - மும்பை அணிகளின் பலம் இதுதான்! #IPL2020

இதுவரை 28 முறை நேருக்கு நேர் ‌சந்தித்துள்ள நிலையில் 17 முறை மும்பையும் 11 முறை சென்னையும் வென்றுள்ளன. #MIvCSK

வெற்றியோடு தொடங்கப்போவது யார்? : சென்னை - மும்பை அணிகளின் பலம் இதுதான்!  #IPL2020
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

கொரோனா காலங்களில் கிரிக்கெட் ‌இல்லாமல் பிளேயர்களும்‌ ரசிகர்களும் சோகத்தில் இருந்தபோது ‌ஐ.பி.எல் பற்றிய BCCI அறிவிப்பு ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ‌கொடுத்தது.‌ இந்தியா-பாகிஸ்தான் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா பார்சிலோனா - ரியல் மாட்ரிட் போன்றதொரு பெரும் போட்டியான CSK vs MI‌‌ போட்டியோடு தொடங்குகிறது இந்தத் தொடர்.

மீம்கள், வீடியோ கட்டிங், போஸ்டர்கள் என நெட்டிசன்கள் தனது பங்கிற்கு அவர்களின் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் ‌தொடரின்‌ முதல் போட்டியாக நடப்பது ரசிகர்களின் இடையே பெரும்‌ உற்சாகத்தையும் போட்டியையும் உண்டாக்கியுள்ளது.‌

இவ்விரு அணிகளும் கோலோச்ச மிகப்பெரிய காரணமாக இருப்பது அணி நிர்வாகம், ஏலத்தில் அவர்கள் மிக நுட்பமாக செயல்படுவது மற்றும் அணியின் கேப்டன். கடந்த 12 ஆண்டுகளில் 7 முறை இவ்விரு அணிகள் கோப்பையை வென்றுள்ளன. மற்ற அணிகளைப்போல் வெளிநாட்டு வீரர்களை நம்பாமல், இவ்விரு அணிகளும் இந்திய பிளேயர்களை வைத்து அணியை கட்டமைத்து உள்ளனர்.

அதிலும் இந்தியாவுக்காக விளையாடிய பிளேயர்கள் இவ்விரு அணிகளில் அதிகமாக உள்ளார்கள். தோனி, ரெய்னா, ஜடேஜா, ஜாதவ், ராயுடு, தாக்கூர், சகார், ரோகித், பாண்டியா பிரதர்ஸ், பும்ரா, ஹர்பஜன், பும்ரா என‌ பட்டியல் தொடர்கிறது. இதுதான் இவ்விரு அணிகளும் 12 இல் 7 முறை கோப்பையை கைப்பற்ற காரணம். இன்றும் இந்த இந்திய வீரர்கள்தான் அந்தந்த அணிகளின் துருப்புச்சீட்டாக இருப்பார்கள்.

என்னதான்‌ சி.எஸ்.கே கொம்பனாக இருந்தாலும் மும்பை என்னும் கும்கியே அதிக முறை‌ வெற்றி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் ‌சந்தித்துள்ளன. அதில் 17 முறை மும்பையும் 11 முறை சென்னையும் வென்றுள்ளன. அதிலும் சிறப்பம்சமாக ரோஹித் கேப்டனாக 2013 இல் பொறுப்பேற்ற பிறகு, 16 போட்டிகளில் 10 முறை தோனியின்‌ அணியை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

வெற்றியோடு தொடங்கப்போவது யார்? : சென்னை - மும்பை அணிகளின் பலம் இதுதான்!  #IPL2020

வரலாற்றை ரசிக்கத்தான்‌ இயலும். அதனை இம்முறையும் பிரதிபலிக்க முடியுமா‌ என்பதை சற்று நுட்பமாக பார்ப்போம். மும்பையிடம் டாப் ஆர்டரில் தொடங்கி நம்பர் 11 வரை கச்சிதமாக இருக்கின்றன. ஆனாலும் அமீரகத்தில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமும் அதுக்கேற்ற சூழலும் உள்ளது. ஆனால் மும்பையிடம் அதற்கேற்றவாறு பந்து வீச்சாளர்கள் இல்லை. அணியில் ராகுல் சகார், ஜெயந்த் யாதவ் மற்றும் குருனால் பாண்டியா என மூன்று பவுலர்கள் மட்டுமே உள்ளனர். இது அமீரகத்தில் மும்பைக்கு சற்றுப் பின்னடைவாக இருக்கக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை ரெய்னா மற்றும் ஹர்பஜன் இல்லாதது பின்னடைவே. அதிலும் குறிப்பாக இந்த தொடர் ஹர்பஜனுடைய தொடராக இருந்திருக்கக்கூடும். அவருக்கு ஏற்றார்போல் அமீரக ஆடுகளம் இருக்கும். வான்கடேவில் துல்லியமாக பந்து வீசிய அவருக்கு அமீரகம் இனிப்பு சாப்பிடுவதைப் போல். அதிலும் மும்பையில் டி காக், குருனால் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் போன்ற இடது கை ஆட்டக்காரர்களுக்கு ஹர்பஜன் இல்லாதது பெரும் பின்னடைவு. வலதுகை சுழற்பந்துவீச்சாளர் இல்லாதது சற்று ஏமாற்றமாக இருக்கும்.

குறிப்பு: இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றால் அது தோனியின் நூறாவது வெற்றியாகும்.

இத்தொடரில் ரோஹித் சர்மா ஓப்பனராக களம் இறங்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது.

இடம்: அபுதாபி

நேரம் : 7.30 மணி

உத்தேசமான XI :

சென்னை சூப்பர் கிங்ஸ் : வாட்சன், டுப்ளெஸ்ஸி, ராயுடு, தோனி, ஜாதவ் , ஜடேஜா, பிராவோ, சாவ்லா, தாக்கூர், சகார், தாஹிர்.

மும்பை இந்தியன்ஸ் : ரோஹித், டி காக், சூர்யாகுமார் யாதவ், இஷான் கிஷன், குருனால் பாண்டியா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, நாதன் கோல்டர்நைல், ட்ரெண்ட் போல்ட், பும்ரா‌‌.

banner

Related Stories

Related Stories