விளையாட்டு

‘இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை வேகமாக வீச வேண்டாமென என்னிடம் கெஞ்சுவார்கள்.’ - ஷோயப் அக்தர்

இந்திய பேட்டிங் வரிசையின் இறுதியில் பேட் செய்ய வருபவர்கள் அக்தரை பார்த்து அஞ்சியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 ‘இந்திய பேட்ஸ்மேன்கள் பந்தை வேகமாக வீச வேண்டாமென என்னிடம் கெஞ்சுவார்கள்.’ - ஷோயப் அக்தர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் பாகிஸ்தான் அணியின் ஷோயப் அக்தரும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது. அவருடைய பந்தை சமாளிக்கப் பல பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டிருக்கிறார்கள். பலர் அஞ்சியிருக்கிறார்கள்.

முக்கியமாக பேட்டிங் வரிசையில் இறுதியில் பேட் செய்யும் எதிரணியின் பந்து வீச்சாளர்கள் அக்தரின் பந்துவீச்சை கண்டு அஞ்சியுள்ளார்கள். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அக்தர் பேசியுள்ளார்.

அதில் பல நினைவுகளை அக்தர் பகிர்ந்துகொண்டார். அதில் ஒன்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கேரி கிரிஸ்டனுடனான நினைவுகள்.

ஒரு முறை அக்தர் வீசிய பவுன்சர் கிரிஸ்டனின் இடது கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டதாக அக்தர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். “நான் கேரியிடம் என்னுடைய பந்தில் புல் ஷாட் அடிக்க முயலாதீர்கள் எனக் கூறினேன். உலகின் வேகமான பந்துவீச்சாளருக்கு எதிராக அதை முயற்சி செய்ய வேண்டாம் எனப் பலமுறை கூறினேன். ஆனால் அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை அதனால் பலமாக அடி பட்டது. அவர் எப்போது என்னைச் சந்தித்தாலும் தன்னுடைய கண்களைக் சுட்டிக் காட்டுவார்.” என அக்தர் தெரிவித்துள்ளார்.

அதே போல் முத்தையா முரளிதரனும் தன்னை பந்தால் அடிக்க வேண்டாம் எனவும், ஆனால் அவுட் ஆக்கிக்கொள்ளவும் எனவும் கூறியுள்ளதாக அக்தர் தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரனைப் போலவே இந்தியப் பந்துவீச்சாளர்களும் “எங்களை அடிக்காதீர்கள் எங்களுக்கு குடும்பங்கள் உள்ளன.” எனச் சொல்லியுள்ளதாக அக்தர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories