துபாயில் நடக்க உள்ள இந்தியன் பிரிமீயர் லீக் தொடருக்கான ஸ்பான்ஸர்ஷிப்பை ட்ரீம் லெவன் நிறுவனம் வென்றுள்ளது.
இந்தியாவில் வருடா வருடம் நடக்கும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தள்ளிபோனது. ஐ.பி.எல் தொடர் நடக்குமா நடக்காதா என்று ரசிகர்கள் ஏங்கியிருந்த நிலையில் செப்டம்பர் 19-ம் தேதி துபாயில் ஐ.பி.எல் தொடங்கும் என பி.சி.சி.ஐ அறிவித்தது. அதற்கு சீன நிறுவனமான விவோ ஸ்பான்ஸராக இருந்தது.
இந்திய மற்றும் சீன இராணுவத்துக்கு இடையே லடாக்கில் மோதல் ஏற்பட்டு இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் சீன பொருட்களைத் தடை செய்யவேண்டும் என பா.ஜ.க ஆதரவாளர்கள் நாடெங்கும் போராட்டம் நடத்தினார்கள்.
இந்திய அரசும் 50-க்கும் மேற்பட்ட சீன ஆப்களை தடை செய்தது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடருக்கு மட்டும் சீன நிறுவனமான விவோ ஸ்பான்ஸராக இருக்கலாமா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து ஐ.பி.எல் தொடருக்கான ஸ்பான்ஸர்ஷிப் ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் தற்போது ட்ரீம் 11 நிறுவனம் வென்றுள்ளது. அதற்காக ட்ரீம் லெவன் நிறுவனத்திடம் இருந்து 222 கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த நான்கு வருடங்களிற்கு ஐ.பி.எல் தொடருக்கு ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்ஸராக இருக்கும்.