விளையாட்டு

‘தோனி பிக்பாக்கெட்டை விட வேகமானவர்’ - தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எம்.எஸ்.தோனி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

‘தோனி பிக்பாக்கெட்டை விட வேகமானவர்’ - தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எம்.எஸ்.தோனி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், 2011 உலக கோப்பையை வென்று தந்தவருமான எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் உலகெங்கும் இருக்கும் தோனி ரசிகர்கள் உருக்கமாக சமூக வலைத்தளங்களில் இது குறித்து பேசிவருகின்றனர்.

‘தோனி பிக்பாக்கெட்டை விட வேகமானவர்’ - தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து

ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி வித்தியாசமான பாணியில் தோனியை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

“அந்த மனிதர் யாருக்கும் சளைத்தவர் கிடையாது. அவர் எங்கே இதைச் செய்தார் என்பதை எண்ணி பார்க்கும்போது அது வருங்கால கிரிக்கெட்டையே மாற்றியமைத்தது. அதில் என்ன அழகு என்றால் அவர் இதை அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் செய்தார்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் “என்னைப் பொறுத்தவரையில் எது தனித்துத் தெரிகிறது என்றால் அவருடைய ஸ்டம்பிங்குகளும், ரன் அவுட்களும்தான். அவருக்கு மிக வேகமாகச் செயல்படக்கூடிய கைகள் உள்ளன. சில நேரங்களில் அவை எந்த ஒரு பிக்பாட்டை விடவும் மிகவும் வேகமாகச் செயல்படக்கூடியவை.” என அவர் தெரிவித்துள்ளார்.

தோனியின் சாதனைகளை பட்டியலிட்டால் அவை ஒரு மிகப்பெரிய மரபை உண்டுபண்ணியுள்ளது என்பதைத் தாண்டி அவருடைய மிக அமைதியான நடத்தை அவரை தனித்துவமானவராக ஆக்கியது என்றும் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories