ஐரோப்பிய கண்டங்களில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பூரை (tottenham hotspur) தவிர்த்து மற்ற மூன்று இங்கிலிஷ் கிளப் அணிகளும் வலிமையான எதிரணிகளைச் சந்திக்கும்படி அட்டவணை அமைந்துள்ளது.
2 லெக் ஆட்டங்களாக நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இருக்கும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி அணி, 13 முறை ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் அணியை சந்திக்கிறது.
அதேபோல், நடப்பு சாம்பியனும், 7 முறை பட்டத்தை வென்ற அணியுமான லிவர்பூல் அணி, ஸ்பெயினின் அட்லெட்டிகோ மேட்ரிட் அணியுடன் மோதுகிறது.
2012 ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியனான செல்சி அணி, பேயர்ன் மியூனிக் அணியுடன் மோதும்படி அட்டவணை அமைந்துள்ளது. இவ்விரு அணிகளும், 2012 சாம்பியன்ஸ் லீக் தொடர் இறுதிப்போட்டியில் விளையாடியதில் செல்சி அணி பட்டம் வென்றது.
2012ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இவ்விரு அணிகளும், மோதுவது கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை இறுதிப் போட்டி வரை முன்னேறிய இங்கிலாந்தின் Tottenham Hotspur அணி, Leipzig அணியுடன் விளையாடுகிறது. 5 முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை அலங்கரித்துள்ள ஸ்பெயினின் பார்சிலோனா அணி, Napoli அணியுடன் மோதுகிறது.
இதேபோல், டோர்ட்மண்ட்(dortmund) - பிஎஸ்ஜி(psg), அட்லாண்டா(atlanta) - வேலன்சியா(valencia), லியோன்(Lyon) - யுவென்டஸ்(juventus) அணிகள் விளையாடும் படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் சுற்று ஆட்டங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறுகிறது.