விளையாட்டு

''இந்திய அணி ரொம்ப மோசம்'' - ட்விட்டரில் கொந்தளித்த யுவராஜ் சிங்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

''இந்திய அணி ரொம்ப மோசம்'' - ட்விட்டரில் கொந்தளித்த யுவராஜ் சிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த 208 ரன்கள் இலக்கை இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

இதற்கிடையே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’இந்திய அணி பீல்டிங்கில் மிகவும் மோசமாக இருந்தது. இளம் வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாகவே செயல்பட்டனர். இந்திய வீரர்கள் இதுபோன்ற தவறுகளைச் செய்ய அவர்கள் அதிகமான போட்டிகளில் விளையாடுவது தான் காரணமா?’’ என யுவராஜ் தெரிவித்துள்ளார்.

''இந்திய அணி ரொம்ப மோசம்'' - ட்விட்டரில் கொந்தளித்த யுவராஜ் சிங்!

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பீல்டிங்கில் மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக, இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் எளிதான கேட்ச்களை கோட்டை விட்டார்.

அதேபோல, ரோஹித் சர்மா எளிதான கேட்சை தவறவிட்டதால் அந்தப் பந்து சிக்சருக்குச் சென்றது. இந்திய அணி தனது மோசமான பீல்டிங்கால் அதிகமான ரன்களை வாரி வழங்கியது.

பீல்டிங்கில் சிறந்த அணியாக செயல்பட்டு வந்த இந்திய அணி, நேற்றைய போட்டியில் மிகவும் மோசமாக செயல்பட்டது இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories