விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன்... பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

துபாயில் நடைபெற்று வரும் பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மாரியப்பன் தங்கவேலு
மாரியப்பன் தங்கவேலு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

துபாயில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஷரத் குமார் வெள்ளிப்பதக்கமும் மாரியப்பன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

நேற்று நடந்த போட்டியில் 1.83 மீட்டர் தாண்டிய சரத் குமார் இரண்டாவது இடமும், 1.80 மீட்டர் தாண்டிய மாரியப்பன் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

ஷரத் குமார்
ஷரத் குமார்

இருவரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். முன்னதாக, மாரியப்பன் கடந்த 2016ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பன் தங்கவேலு
மாரியப்பன் தங்கவேலு

இதுகுறித்து பேசிய மாரியப்பன், "இந்தப் போட்டியில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை தரவில்லை. இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம். போட்டி நடைபெற்ற மாலை நேரம் அதிக குளிராக இருந்ததால், சிரமமாக இருந்தது. இருப்பினும், 2020 பாரா ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

banner

Related Stories

Related Stories