விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளை நோக்கி ரசிகர்களை ஈர்க்க கங்குலி அசத்தல் திட்டம்... பொறுப்பேற்றது முதல் தொடரும் அதிரடி!

கங்குலி பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றது முதல் இந்திய கிரிக்கெட்டில் பெரும் நம்பிக்கை வெளிச்சம் தென்படத் துவங்கி இருக்கிறது.

டெஸ்ட் போட்டிகளை நோக்கி ரசிகர்களை ஈர்க்க கங்குலி அசத்தல் திட்டம்... பொறுப்பேற்றது முதல் தொடரும் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்றது முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

T20 போட்டிகளின் வருகைக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளின் மீதான வரவேற்பு குறைந்துவிட்டது. இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு நேரில், மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் பார்வையாளர்களை அதிகரிப்பது குறித்து விவாதம் எழுந்தபோது, பகல்-இரவு போட்டிகளாக் டெஸ்ட் போட்டிகளை நடத்தினால் அதிகளவிலான ரசிகர்களை ஈர்க்கலாம் எனத் தெரிவித்திருந்தார் கங்குலி.

பிசிசிஐ தலைவராகப் பதவியேற்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் கோலியிடம் ஆலோசனை செய்த கங்குலி, பகல்-இரவு டெஸ்ட் ஆடுவது குறித்துப் பேசியிருக்கிறார்.

உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கிய் கங்குலி, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக ஆட சம்மதமா எனக் கேட்டு வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

வங்கதேச கிரிக்கெட் போர்டு தாங்கள் கடிதத்தை பெற்றதாகவும், தாங்கள் இன்னும் இது பற்றி விவாதிக்கவில்லை என்றும் விளக்கம் கூறி இருக்கிறது. இதுகுறித்து "வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவருடன் பேசி இருக்கிறேன். அவர்கள் வீரர்களுடன் கலந்து பேசி அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள்" என பிசிசிஐ தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பகல்-இரவு டெஸ்ட் ஆட்டங்களில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படவேண்டும். அதற்கேற்ப வீர்ர்கள் பயிற்சிபெற வேண்டும். எனவே, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆட்டம் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற சாத்தியம் குறைவென்றாலும், மிக விரைவில் டெஸ்ட் போட்டிகள் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் எனத் தெரிகிறது.

கங்குலி பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றது முதல் இந்திய கிரிக்கெட்டில் பெரும் நம்பிக்கை வெளிச்சம் தென்படத் துவங்கி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories