விளையாட்டு

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்த விராட் கோலி - டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை!

டெஸ்ட் அரங்கில் கேப்டனாக கோலி தனது 19வது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்த விராட் கோலி - டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி ஏதேனும் சாதனை படைத்து வருகிறார் இந்திய கேப்டன் விராட் கோலி. நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியிலும் சில மைல்கற்களை கடந்து சாதனைகளை தனதாக்கியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கியது. இந்தப் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273 ரன்கள் குவித்தது.

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்த விராட் கோலி - டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை!

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி தற்போது வரை 367 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 58 ரன்களுடனும், கோழி 115 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர். டெஸ்ட் அரங்கில் தனது 26வது சதத்தை விளாசியுள்ளார் கோலி.

இந்தப் போட்டியில் 78 ரன்கள் எடுத்தபோது கோலி, இந்திய அணிக்காக டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்துக்கு முன்னேறினார். முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்சர்காரை (6,868 ரன்கள்) பின்னுக்குத் தள்ளினார் கோலி.

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்த விராட் கோலி - டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை!

வெங்சர்கார் 116 டெஸ்டில் பங்கேற்று, 6,868 ரன்கள் எடுத்துள்ளார். கோலி 81 டெஸ்டில் பங்கேற்று வெங்சர்காரை முந்தியுள்ளார். டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் (15,921 ரன்கள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.

மேலும், டெஸ்ட் அரங்கில் கேப்டனாக கோலி தனது 19வது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். இப்பட்டியலில் முன்னாள் தென் ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் (25 சதம்) முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories