விளையாட்டு

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கேப்டனின் சாதனை... ‘கன்னி’ சதத்தை விளாசிய ரஹமத் ஷா - இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா?

ஆப்கானிஸ்தானின் ரஹமத் ஷா தனது ‘கன்னி’ சதத்தைப் பூர்த்தி செய்தார். அதுவே டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தானின் கன்னி சதமும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கேப்டனின் சாதனை... ‘கன்னி’ சதத்தை விளாசிய ரஹமத் ஷா - இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வங்கதேசம் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இந்த டெஸ்டில், ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக செயல்பட்டார்.

உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஷித் கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த வயதிலேயே அணியை வழிநடத்தியவர் என்ற சிறப்பை ரஷித் கான் பெற்றார். ரஷித் கானின் வயது 20 ஆண்டு 350 நாட்கள் ஆகும்.

சிட்டோகிராமில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் அபாரமாக ஆடிய 26 வயதான ரஹமத் ஷா தனது ‘கன்னி’ சதத்தைப் பூர்த்தி செய்தார். அதுவே டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தானின் கன்னி சதமும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ரஹமத் ஷா. சதத்தை எட்டிய அடுத்த பந்திலேயே ரகமத் ஷா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கேப்டனின் சாதனை... ‘கன்னி’ சதத்தை விளாசிய ரஹமத் ஷா - இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா?

முன்னதாக, ரஹமத் ஷா அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் 98 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தைக் கோட்டை விட்டதால் கடும் ஏமாற்றமடைந்தார். நேற்றைய சதத்தின் மூலம் அவரது கனவு மட்டுமல்ல; ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் கனவும் நிறைவேறியது.

கடந்த ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு தனது சதத்தின் மூலம் பெருமை தேடிக் கொடுத்துள்ளார் ரஹமத் ஷா. அந்த அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வென்றுள்ளது.

banner

Related Stories

Related Stories