விளையாட்டு

ஓய்வை நோக்கி தள்ளப்படுகிறாரா தோனி : தென்னாப்பிரிக்க தொடரிலும் புறக்கணிப்பு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியில் தோனி மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை.

ஓய்வை நோக்கி தள்ளப்படுகிறாரா தோனி : தென்னாப்பிரிக்க தொடரிலும் புறக்கணிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று T20 போட்டிகளில் விளையாட உள்ளது. T20 தொடர் செப்டம்பர் 15ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ நேற்று அறிவித்தது. மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து விலகிய தோனி இந்த தொடரிலும் இடம்பெறமாட்டார் என கூறப்பட்டு வந்தது.

அது போலவே தோனி அணியில் இடம்பெறவில்லை. உலகக்கோப்பைக்கு பிறகு ஓய்விலிருந்த பாண்டியா தற்போது அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ருணால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், கலீல் அகமது, தீபக் சஹார் மற்றும் நவ்தீப் சைனி.

தோனி இரண்டு மாத ஓய்வில் இருந்ததால் தான் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. ஆனால், தோனி இருக்கும் போது அவரை புறம்தள்ளி பண்ட்டை ஏன் அணியில் சேர்த்தனர், என தோனி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தோனி ஓய்வை அறிவிக்க நிர்ப்பந்திக்கவே அணியில் தவிர்க்கப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories