விளையாட்டு

‘அணிக்கு எது தேவையோ அதையே செய்தோம்’ : ரோகித் நீக்கப்பட்டது குறித்து கோலியின் விளக்கத்தால் சர்ச்சை !

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா நீக்கப்பட்டது குறித்து விராட் கோலி விளக்கமளித்துள்ளது சர்ச்சை கிளப்பியுள்ளது.

‘அணிக்கு எது தேவையோ அதையே செய்தோம்’ : ரோகித் நீக்கப்பட்டது குறித்து கோலியின் விளக்கத்தால் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 297 ரன்களும், வெஸ்ட் இன்டீஸ் 222 ரன்களும் எடுத்திருந்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, 419 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணியை துரத்தியது. இந்திய அணி வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் வெறும் நூறே ரன்களில் மேற்கிந்திய தீவுகள் அணியை சுருட்டியது.

இதனையடுத்து 318 ரன்கள் வித்தியாசத்தில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி அபாரமான வெற்றியை பெற்று சாதனையும் படைத்தது.

‘அணிக்கு எது தேவையோ அதையே செய்தோம்’ : ரோகித் நீக்கப்பட்டது குறித்து கோலியின் விளக்கத்தால் சர்ச்சை !

இதற்கிடையில், இந்த டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ததில் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியது. குறிப்பாக ரோகித் சர்மாவை ப்ளேயிங் லெவனில் இருந்து நீக்கியது கடுமையான சர்ச்சைக்கு வித்திட்டது.

ரோகித் சர்மாவை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான கங்குலி, அசாருதீன், சேவாக், சோயிப் அக்தர் என பலர் அதிருப்தி தெரிவித்தும், அவரை அணியில் சேர்க்காததற்கு கண்டனமும் தெரிவித்திருந்தனர்.

‘அணிக்கு எது தேவையோ அதையே செய்தோம்’ : ரோகித் நீக்கப்பட்டது குறித்து கோலியின் விளக்கத்தால் சர்ச்சை !

இந்நிலையில், விளக்கமளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அணியை ஒன்று சேர்ப்பது மிகப்பெரிய விஷயம். அனுமன் விஹார் சிறந்த பந்து வீச்சாளர் என்பதாலேயே அவரை அணியில் சேர்த்தோம்.

இது முற்றிலும் கலந்தாலோசிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் எடுக்கப்பட்ட முடிவு. அணியின் நலனுக்காக எது முக்கியமோ அதை செய்திருக்கிறோம் என பேசியுள்ளார்.

கோலியின் இந்த பேச்சுக்கும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ரோகித்தின் மீதான காழ்ப்புணர்ச்சியில் எல்லாம் செய்துவிட்டு சுலபமாக அணியை கை காட்டுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories