விளையாட்டு

INDVSWI : அணிக்கு திரும்பும் ஷிகர் தவான் - அப்போ ராகுலின் நிலைமை!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புளோரிடாவில் இன்று நடைபெறுகிறது.

INDVSWI : அணிக்கு திரும்பும் ஷிகர் தவான் - அப்போ ராகுலின் நிலைமை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலக கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதுகிறது. மூன்று டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் முதலாவது டி20 போட்டி புளோரிடாவில் இன்று நடைபெறுகிறது.

அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்திய அணி ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, நவ்தீப் சைனி போன்ற பல இளம்வீரர்களை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

INDVSWI : அணிக்கு திரும்பும் ஷிகர் தவான் - அப்போ ராகுலின் நிலைமை!

காயத்திலிருந்து மீண்டு வந்த ஷிகர் தவான் தான் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார். எனவே ராகுல் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் களமிறக்கப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது.

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே இருவரும் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற தொடரில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணிக்குள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் தான் மெயின் அணியில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல பந்துவீச்சில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது அணியில் இடம்பெறுவார். அதேசமயத்தில் நவதீப் சைனி அல்லது தீபக் சாஹர் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிட்டும். இளம் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாஹர், ரவீந்திர ஜடேஜாவுடன் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது.

இன்றைய போட்டிக்கான உத்தேச இந்திய அணி;

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல், விராட் கோஹ்லி, மணிஷ் பாண்டே\ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர், கலீல் அஹமது, தீபக் சாஹர்\நவ்தீப் சைனி.

முதல் டி-20 ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியை சோனி சிக்ஸ், சோனி சிக்ஸ் எச்டி ஆகிய சேனல்களில் பார்க்கலாம். மேலும், போட்டிகளை சோனி LIV செயலியிலும் நேரடியாக காணலாம்.

banner

Related Stories

Related Stories