விளையாட்டு

இன்னும் தீராத கோலி-ரோஹித் பிரச்சினை : மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு புகைப்படம்!

ரோஹித்துடன் எந்த வித பிரச்னையும் இல்லை எனக் கோலி வெளியில் கூறினாலும், அவர்கள் இருவரிடையே இன்னும் பிரச்சனை இருந்து வருகிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் தீராத கோலி-ரோஹித் பிரச்சினை : மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு புகைப்படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகக்கோப்பையை நிச்சயம் இந்தியாதான் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே, இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

அதில், ரோஹித்தின் யோசனைகளை விராட் கோலி கேட்கவில்லை என்றும், இந்திய கிரிக்கெட் அணியில் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் ரோஹித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் இந்திய அணியின் கேப்டன்சியை ரோஹித் சர்மாவிடம் வழங்க பி.சி.சி.ஐ ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியானது.

கடந்த வாரம், கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டார். இந்தச் செய்தி நெட்டிசன்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. இந்நிகழ்வு கோலி - ரோகித் இடையே பனிப்போர் நிலவி வருவதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது.

இந்நிலையில் நேற்று விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரோகித் சர்மாவுடன் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான செய்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கோலி, எங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை. இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் யார் பயனடைகிறார்கள் எனத் தெரியவில்லை என்றுத் தெரிவித்தார்.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் செல்வதற்கு முன் விராட் கோலி இந்திய அணியின் மற்ற வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த செல்ஃபியில் ராகுல், சுந்தர், மனிஷ் பாண்டே, கலீல் அகமது மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் இருந்தனர்.

ஆனால், அந்த செல்ஃபியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கும் ரோஹித் சர்மாவிற்கும் எந்தவித பிரச்சனையும் இல்லையென்றால் ஏன் அவருடன் புகைப்படம் எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரோகித்துடன் எந்த வித பிரச்சினையும் இல்லை எனக் கோலி வெளியில் கூறினாலும், அவர்கள் இருவரிடையே இன்னும் பிரச்சனை இருந்து வருகிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories