விளையாட்டு

"ஒரு நல்ல டீம் இப்படி இருக்கக் கூடாது" - 2 வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து கங்குலியின் ஆதங்க ட்வீட்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இவர்கள் இருவரும் அணியில் இடம்பெறாதது ஆச்சரியமாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

"ஒரு நல்ல டீம் இப்படி இருக்கக் கூடாது" - 2 வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து கங்குலியின் ஆதங்க ட்வீட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடருக்கான வீரர்களை, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. அணியில் நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய 'ஏ' அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, நவ்தீப் சைனி ஆகியோர் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.

தொடர் நாயகன் விருது வென்ற சுப்மன் கில்
தொடர் நாயகன் விருது வென்ற சுப்மன் கில்
https://twitter.com/RealShubmanGill

ஆனால், அத்தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற சுப்மன் கில் அணியில் சேர்க்கப்படாதது பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. சுப்மன் கில்லை அணியில் எடுக்காமல் கேதார் ஜாதவ் தேர்வு செய்தது குறித்து இணையத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தேர்வுக்குழுவினர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஒரே வீரர்களை தேர்வு செய்யும் விளையாட வைக்கும் நேரம் வந்து விட்டது. இதனால் வீரர்களுக்கு நம்பிக்கை உண்டாகும். ஒரு சிலரே அனைத்து விதமான போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார்கள். சிறப்பான அணிகளில் எப்போதும் நிலையான வீரர்கள் இருந்தனர். எல்லோரையும் மகிழ்விக்க வேண்டிய தேவையில்லை. நாட்டுக்காக விளையாட நிலையான வீரர்களை தேர்வு செய்வது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களில் வெகு சிலர் மட்டுமே அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஆடக்கூடயவர்கள். ரஹானே மற்றும் சுப்மன் கில் ஒருநாள் போட்டியில் இடம்பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது " என்றார்.

banner

Related Stories

Related Stories