விளையாட்டு

இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாட இதை செய்ய வேண்டியது கட்டாயம் - கும்ப்ளே யோசனை பலனளிக்குமா ?

இந்திய அணி வெளிநாடுகளில் சிறப்பாக விளையாட வேண்டுமென்றால் வெளிநாட்டு T20 தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாட இதை செய்ய வேண்டியது கட்டாயம் - கும்ப்ளே யோசனை பலனளிக்குமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடர் போல உலகெங்கும் கரீபியன் பிரிமியர் லீக், பிக் பேஷ் போன்ற T20 தொடர்கள் உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது. ஆனால், உலகெங்கிலும் நடைபெறும் இது போன்ற T20 தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு இதுவரை பி.சி.சி.ஐ அனுமதி சான்று (என்.ஓ.சி) வழங்கியதில்லை.

இந்நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கு கனடாவில் நடைபெறும் குளோபல் T20 லீக்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளரான அனில் கும்ப்ளே, “ வெளிநாட்டு தொடரில் பங்கேற்க தற்போது சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், யுவராஜ் சிங்கிற்கு விளையாட அனுமதி கிடைத்துள்ளது.

எனவே, இந்திய வீரர்களில் சிலர் வெளிநாட்டு தொடரில் விளையாட விரும்பினால் பி.சி.சி.ஐ அவர்களுக்கு என்.ஓ.சி கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில், யுவியைப் போன்ற ஒருவர் வெளிநாட்டு தொடரில் விளையாடுவது நல்லது, எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து அதிகமான வீரர்கள் வெளிநாட்டு தொடரில் பங்கேற்பதைக் காணலாம்” என்று கூறினார்.

மேலும், “ இதுபோன்ற போட்டிகளில் ஆடுவதன் மூலம் இளம் வீரர்களுக்கு அனுபவம் கிடைக்கும். இந்திய அணி வெளிநாடுகளில் தோற்பதற்கு அங்குள்ள சீதோஷ்ண நிலையுடன் ஒத்துப்போகாதது மற்றும் வீரர்களின் அனுபவமின்மையே காரணம்.

அதனால் வெளிநாட்டு தொடர்களில் இந்திய இளம் வீரர்கள் சென்று விளையாட பி.சி.சி.ஐ அனுமதிக்க வேண்டும். வெளி நாடுகளில் சென்று இளம் வீரர்கள் ஆடும் போது அவர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாட இதை செய்ய வேண்டியது கட்டாயம் - கும்ப்ளே யோசனை பலனளிக்குமா ?

சுழற்பந்துவீச்சுக்கு எதிராக திணறிய வீரர்கள் எல்லாம் ஐ.பி.எல்.,லில் பங்கேற்று சுழற்பந்துவீச்சில் நன்றாக விளையாடி வருகின்றனர். எனவே, இதுபோன்ற தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்கிற கும்ப்ளேவின் கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories