விளையாட்டு

இளைஞரான ரிஷப் பண்ட்க்கு வழிவிட்டு ஒதுங்கும் தோனி : கிளம்பும் யூகங்கள்.. திரை மறைவுத் தகவல்கள் !

இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் தோனி முதன்மையாக விக்கெட் கீப்பராக செல்லமாட்டார் என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இளைஞரான ரிஷப் பண்ட்க்கு வழிவிட்டு ஒதுங்கும் தோனி : கிளம்பும் யூகங்கள்.. திரை மறைவுத் தகவல்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

38 வயதான தோனி உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியுடன் தோற்று வெளியேறிய போது, தோனி ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும், அடுத்து வரும் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் வலம் வருகின்றன.

இளைஞரான ரிஷப் பண்ட்க்கு வழிவிட்டு ஒதுங்கும் தோனி : கிளம்பும் யூகங்கள்.. திரை மறைவுத் தகவல்கள் !

இந்நிலையில், “இனிமேல் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் தோனி முதன்மையாக விக்கெட் கீப்பராக செல்லமாட்டார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் அணியில் தோனி இடம்பெறுவார். ரிஷப் பண்ட்க்கு தோனி வெளியில் இருந்து ஆலோசனை வழங்குவார் ” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரான ரிஷப் பண்ட்க்கு வழிவிட்டு ஒதுங்கும் தோனி : கிளம்பும் யூகங்கள்.. திரை மறைவுத் தகவல்கள் !

மேலும், “ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள போது டி20 உலகக் கோப்பை தொடரின் போது பண்ட்க்கு 23 வயது ஆகியிருக்கும். உலகக் கோப்பை தொடருக்கு தயார் ஆக இந்த ஒரு வருட காலம் அவருக்கு போதுமானதாக இருக்கும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்ற ஒரு கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுகிறது. தோனியின் ரசிகர்களோ, தோனி 2020 டி-20 உலகக்கோப்பை வரை விளையாடவேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories