2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், நேற்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது நியூசிலாந்து. 242 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, கடைசி ஓவரின் முடிவில் 241 ரன்களே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
பின்னர் சூப்பர் ஓவரில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. அவர்களை அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் எடுத்தது.அதனால், சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது.
இதையடுத்து அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் துரதிஷ்டவசமாக உலகக்கோப்பை வெல்லும் வெல்லும் வாய்ப்பை நியூசிலாந்து இழந்தது.
இந்நிலையில், நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் தோல்வியின் விரக்தியில், “ குழந்தைகளே...! இனிமேல் விளையாடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதிவில், “ குழந்தைகளே...! இனிமேல் விளையாடாதீர்கள். பேக்கிங் அல்லது வேறு ஏதேனும் எடுத்துக்கொள்ளுங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள், 60 வயதில் இறந்து விடுங்கள்” என தெரிவித்துள்ளார்.