விளையாட்டு

“கடைசி மூச்சு உள்ளவரை விளையாடுவேன்” : ட்விட்டரில் ரவீந்திர ஜடேஜா உருக்கம்!

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்ததை அடுத்து கிரிக்கெட் வீரர் ஜடேஜா ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

“கடைசி மூச்சு உள்ளவரை விளையாடுவேன்” : ட்விட்டரில் ரவீந்திர ஜடேஜா உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி நேற்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து சேஸ் செய்த இந்திய அணி தொடக்கத்தில் சுணக்கமாக ஆடியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சுருண்டன. 5 விக்கெட்டுகள் சரிந்த பின்னர் களமிறங்கி நிதானமாக ஆடிய தோனியுடன் கைகோர்த்த ரவீந்திர ஜடேஜாவின் அசத்தலான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது.

“கடைசி மூச்சு உள்ளவரை விளையாடுவேன்” : ட்விட்டரில் ரவீந்திர ஜடேஜா உருக்கம்!

59 பந்துகளில் 77 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜாவுக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் புகழ்ந்து, பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியை அரை இறுதியில் ஒரு பாகுபலி போன்று உயர்த்தி பிடித்திருந்தார் ஜடேஜா என்றும் பதிவிட்டுள்ளனர்.

இருப்பினும் போராடி, நியூசிலாந்திடம் விக்கெட்டுகளை பறிகொடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்திய அணி. இந்த நிலையில் தனது கடைசி மூச்சு உள்ளவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என ஜடேஜா ட்வீட் செய்துள்ளார்.

“ஒவ்வொரு முறையும் சரிந்து விழும்போதும், திடமாக எழுந்து நிற்பதற்கு இந்த விளையாட்டு கற்றுக்கொடுத்திருக்கிறது. எனக்கு உத்வேகம் அளித்த ஒவ்வொரு ரசிகருக்கும் நன்றி மட்டும் கூறினால் போதுமானதாக இருக்காது. உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி. மேலும், மேலும் உத்வேகம் அளித்துக்கொண்டே இருங்கள். நிச்சயம் என் கடைசி மூச்சு இருக்கும் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என ஜடேஜா உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories