நடப்பு ஆண்டுக்கான உலகக்கோப்பை 2019 போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நிறைவடைந்ததை அடுத்து புள்ளிப்பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து என்ற வரிசையில் உள்ள அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதியாகியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மான்செஸ்டர் நகரில் இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால் சுருண்டு வந்தது. 46.1 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நின்றது. இதனால் இன்று மீண்டும் விட்ட இடத்திலிருந்து போட்டி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், இந்திய அணி வீரர்களின் செய்கை பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பாலும் கிரவுண்டில் சக வீரர்களுக்கு கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆலோசனை வழங்குவது தோனியின் வழக்கம். அது பல சமயங்களில் வெற்றிக்கு வித்திட்டிருக்கும்.
ஆனால் நேற்றைய அரையிறுதி போட்டியின் போது நடந்த சம்பவம் தோனி ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது. பந்து வீசச் சென்ற ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் கோலியும், ரோஹித் சர்மாவும் அட்வைஸ் அளித்துக்கொண்டிருந்தார். மூவரும் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை நோக்கி வந்த தோனியை மூவருமே கண்டுகொள்ளாததால் அதனை பெரிதுபடுத்தாமல் அவர் கடந்து சென்று தனது கீப்பிங் பணியை தொடர்ந்தார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு தோனி ரசிகர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், 46 ஆவது ஓவரின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய பந்தை அடித்து ரன் எடுப்பதற்காக ஓடினார் நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர்.
அப்போது பந்தை தடுத்த சஹல் வேகமாக தோனியிடம் வீசி அவுட் செய்ய முற்பட்டபோது அதனை தோனி தவறவிட்டுள்ளார். இதனை கண்ட விராட் கோலி மைதானத்திலேயே சற்று கோபத்தை வெளிபடுத்தியிருக்கிறார். இதுவும் தற்போது சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 350 போட்டிகளை விக்கெட் கீப்பராக நிறைவு இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தோனி. முன்னதாக 463 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு தனது ஓய்வை தோனி அறிவிப்பார் என செய்தி வெளியாகியுள்ள நிலையில் நேற்றையப் போட்டியில் நடந்த சம்பவங்கள் மூலம் தோனியின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணி என்ன ஆகுமோ என ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.