விளையாட்டு

IND vs ENG ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், கோலி படைத்த புதிய சாதனை!

நேற்றைய ஆட்டத்தில் அரைசதத்தை எட்டியதன் மூலம் உலகக்கோப்பையில் புதிய சாதனையைப் படைத்துள்ளார் கோலி.

IND vs ENG ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், கோலி படைத்த புதிய சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இது இத்தொடரில் இந்திய அணிக்கு முதல் தோல்வியாக அமைந்தது.

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ரன் ஏதிமின்றி அவுட் ஆக கேப்டன் விராத் கோலி களமிறங்கினார்.

ரோஹித் சர்மாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதத்தைப் பதிவு செய்தார். இந்த அரைசதத்தை எட்டியதன் மூலம் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் எடுத்த முதல் கேப்டன் எனும் சாதனையைப் படைத்துள்ளார் கோலி. ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 54-வது சதம் ஆகும்.

IND vs ENG ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், கோலி படைத்த புதிய சாதனை!

முன்னதாக, உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக முறையே 82,77,67,72 ரன்கள் அடித்த்திருந்தார் கோலி. 4 அரை சதங்கள் அடித்துள்ள தென் ஆப்ரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித், ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோரின் சாதனையை கோலி சமன் செய்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய அரைசதம் மூலம் அவர்களது சாதனைகளை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்திருக்கிறார் இந்திய அணி கேப்டன் விராத் கோலி.

banner

Related Stories

Related Stories