விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் சாதனை !

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி, சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் சாதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, சாதனைகளை முறியடிப்பதுசர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இந்திய அணி, நாளை (22.06.2019) நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 104 ரன்கள் எடுத்தால், விரைவாக 20,000 ரன்கள் சேர்த்த சச்சினின் சாதனையை முறியடிப்பார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் முன்னணி வீரர் பிரையன் லாரா ஆகியோர் 20,000 ரன்களை ஸ்கோர் செய்ய 453 இன்னிங்ஸ் எடுத்து கொண்டனர். கோலி இதுவரை 31 டெஸ்ட் போட்டிகள், 222 ஒருநாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகள் என மொத்தம் 415 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 19,896 ரன்கள் குவித்துள்ளார்.

இதற்கு முன்னர் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்களை கடந்ததன் மூலம், அதிவகேமாக 11,000 ரன்களை கடந்தவர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories