விளையாட்டு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு திடீர் ஊக்க மருந்து சோதனை !

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு நேற்று திடீரென ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு திடீர் ஊக்க மருந்து சோதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சவுடாம்தனில் நாளை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்காக இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தென் ஆப்பிரிக்க அணியும் கடந்த இரு போட்டிகளில் தோல்வியுற்றதால், இம்முறை எப்படியாவது வெல்ல வேண்டும் என்கிற முனைப்பில் செயல்படுகிறது.

இந்திய வீரர்கள் வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டபோது வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை மட்டும் ஊக்க மருந்து தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்றனர். இதனை மைதானத்தில் இருந்த அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஜஸ்பிரித் பும்ராவிடம் 2 விதமான சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்சுற்றுச் சோதனையில் பும்ராவின் சிறுநீர் எடுத்து பரிசோதிக்கப்பட்டது, அடுத்த 45 நிமிடங்களுக்குப்பின் பும்ராவின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை குறித்து வெளியான தகவலை மைதான அதிகாரிகளும், இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.

நாளை உலக கோப்பை 2019 முதல் போட்டியை விளையாட உள்ள இந்தியாவிற்கு இது கடும் அதிர்ச்சிகரமான செய்தியாகவே உள்ளது. மேலும், பும்ராவிற்கு ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளப் பட்டதற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை.

banner

Related Stories

Related Stories