இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) கார்டிப்பில் நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக திரிமன்னேவும் கருணரத்னேவும் களமிறங்கினர்.
ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்திய திரிமன்னே அடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. இருப்பினும், மறுமுனையில் கேப்டன் கருணரத்னே அரைசதம் கடந்தார். 29.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி, 136 ரங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் கருணரத்னே 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி மற்றும் பெர்குசன் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
137 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ களமிறங்கினர். 16.1 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. குப்தில் 73 ரன்களும் முன்ரோ 58 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து சார்பில் கப்தில் 73 ரன்களும் முன்ரோ 58 ரன்களும் எடுத்தனர்.
மூன்று விக்கெட்கள் வீழ்த்திய மேட் ஹென்றி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.