உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி பகார் சமான் மற்றும் இமாம் உல் ஹக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இமாம் உல் ஹக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஸல் பந்தில் பகார் ஜமான் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாபர் ஆசமும் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர்.
ஹாரிஸ் சோகைல் (8), சர்பிராஸ் அகமது (8), இமாத் வாசிம் (1), சதாப் கான் (0), ஹசன் அலி (1) என வரிசையாக ஆட்டமிழந்தனர். இதனால், 21.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி, 105 ரன்களில் சுருண்டது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஒசேன் தாமஸ் 4 விக்கெட்டுகளும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ரஸல் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.