விளையாட்டு

IPL 2019 : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை? #MIvsKXIP 

ஐ.பி.எல் தொடர் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

IPL 2019 : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை? #MIvsKXIP 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.பி.எல் தொடர் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோற்றது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி 12 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. வான்கடே மைதானத்தைப் பொறுத்தவரை இரு அணிகளும் 8 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வென்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த இரு போட்டிகளில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்த வெற்றி நம்பிக்கையுடன் மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

Kieron Pollard
Kieron Pollard

டி-காக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 39 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் டாப் ஆர்டர் மோசமாக விளையாடியது. இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கீரன் பொல்லார்ட் 26 பந்துகளில் 46 ரன்களை விளாசினார். எனவே, இன்றைய போட்டியிலும் ஒரு பெரிய இன்னிங்ஸை இவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம்.

Alzari Joseph
Alzari Joseph

அல்சாரி ஜோசப் தனது அறிமுக போட்டியிலேயே ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்களை தனது பௌலிங்கில் சிதைத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். எனவே இதே ஆட்டத்திறனை பஞ்சாப் அணிக்கு எதிராகவும் தொடரும் என நம்பப்படுகிறது. ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் ஜேஸன் பெஹராண்டார்ப் பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என தெரிகிறது.

உத்தேச அணி ; ரோகித் சர்மா (கேப்டன்), குவின்டன் டிகாக் (விக்கெட் கீப்பர்), சூர்ய குமார் யாதவ், இஷான் கிசான், ஹார்திக் பாண்டியா, க்ருநால் பாண்டியா, கீரன் பொல்லார்ட், ஜேஸன் பெஹாரன்ஆஃப், லாசித் மலிங்கா, அல்சாரி ஜோசப், ராகுல் சகார், ஜாஸ்பிரிட் பூம்ரா.

கிங்ஸ் XI பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான கடந்த போட்டியில் மீண்டும் வெற்றப்பாதைக்கு திரும்பியுள்ளது. எனவே பஞ்சாப் அணி வீரர்கள் மும்பை அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை குவிக்கும் நோக்கில் களமிறங்குவார்கள்.

KL Rahul & Mayank Agarwal
KL Rahul & Mayank Agarwal

கே.எல்.ராகுல் கடந்த இரு போட்டிகளில் தொடர்ந்து அரை சதங்களை விளாசியுள்ளார். கிறிஸ் கெய்ல் மற்றும் மயான்க் அகர்வால் ஆகியோரும் நட்சத்திர வீரர்களாக பஞ்சாப் அணியில் உள்ளனர். எனவே இவர்களின் அதிரடி இன்றைய போட்டியிலும் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sam Curran
Sam Curran

முகமது ஷமி, முஜீப் ரகுமான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாம் கரன் தனது ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை சிறப்பாக பஞ்சாப் அணிக்கு அளித்து வருகிறார். இந்த 4 பேரும் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள்.

உத்தேச அணி ; கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர்), மயான்க் அகர்வால், சஃப்ரஸ் கான், டேவிட் மில்லர், சாம் கர்ரான், மந்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின்(கேப்டன்), முகமது ஷமி, முஜீபுர் ரகுமான், அன்கிட் ராஜ்பூட்.

banner

Related Stories

Related Stories