ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறதுஇந்தத் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன.இதுவரை நான்கு போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில், ஆர்சிபியை வீழ்த்தி சிஎஸ்கே அணியும், சன்ரைசர்ஸை வீழ்த்தி கொல்கத்தா அணியும், மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸும் வெற்றி பெற்றுள்ளன.நேற்று நடந்த நான்காவது போட்டியில் ராஜஸ்தான் அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தது.அதேவேளையில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியது.214 ரன்களை இலக்காக கொடுத்த டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இன்றைய ஆட்டம் நடை பெறும் பெரோஷா கோட்லா ஆடுகளமும், சேப்பாக்கம் ஆடுகளம் போன்று மந்தமாக செயல்படக்கூடியதுதான்.இதனால் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டெல்லி அணி பேட்ஸ் மேன்களுக்கு தொல்லைகள் தரக்கூடும்.
இரு அணிகளும் இதுவரை 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 12-ல் சென்னை அணியும், 6-ல் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.
சென்னை உத்தேச அணி
மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ்,ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ,இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங்,ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, தீபக் ஷகார்
டெல்லி கேபிடல்ஸ் உத்தேச அணி
ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷிகர் தவண், ரிஷப் பந்த், பிரித்வி ஷா, காலின் இங்க்ராம், இஷாந்த் சர்மா, காகிசோ ரபாடா,சந்தீப் லமிசான்/டிரென்ட் போல்ட், அக்சர் படேல், கீமோ பால், ராகுல் டிவாட்டியா/அமித் மிஸ்ரா,