அரசியல்

தொழுவதற்கு உரிமை கேட்ட இடத்தில் தொடுவதற்கு உரிமை பெற்று தந்த இயக்கம் திமுக - திருச்சி சிவா MP பேச்சு !

தொழுவதற்கு உரிமை கேட்ட இடத்தில் தொடுவதற்கு உரிமை பெற்று தந்த இயக்கம் திமுக - திருச்சி சிவா MP பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேச்சு போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வில் பரிசு பெற்ற 182 இளம் பேச்சாளர்களையும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறுகிற கழக நிகழ்ச்சிகளில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கழக இளைஞரணி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் 8வது நிகழ்வாக கழக இளம் பேச்சாளர்களின் கருத்தியல் பேச்சரங்கம் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழக கொள்கை பரப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழுக்கான அடையாளம். பொது மேடைகளில் பேசும்போது அண்ணா ஆங்கிலத்தில் உரையாற்ற மாட்டார். அண்ணா,கலைஞர் உள்ளிட்டோர் எழுதிய நூல்களை படியுங்கள்.

தொழுவதற்கு உரிமை கேட்ட இடத்தில் தொடுவதற்கு உரிமை பெற்று தந்த இயக்கம் திமுக - திருச்சி சிவா MP பேச்சு !

மேடையின் மூலம் மாற்றத்தை கொண்டு வரலாம் என எழுத தொடங்கியது திமுக தான். தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சாளர்கள் வைரங்கள். பல கோணங்களில் அவர்களை பட்டை தீட்ட வேண்டும். மொழி, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை சொல்லி கொடுக்க வேண்டும்.

தொழுவதற்கு உரிமை கேட்ட இடத்தில் தொடுவதற்கு உரிமை பெற்று தந்தது திராவிட மாடல் அரசுதான். சுயமரியாதை திருமணத்தை சட்டரீதியாக கொண்டு வந்தவர் அண்ணா. 13ஆண்டுகள் ஆட்சி பொறுப்பு இல்லாமல் கலைஞர் கழகம் நடத்தினார். போராட்ட உணர்வு உள்ளே இருப்பதால் தான் எங்கேயும், எப்போதும் அவர் கலங்கியதில்லை. அடிப்படையில் கலைஞர் என்பவர் கட்சி தலைவர் அல்ல, போராளி. எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல். மொழி பாதுகாப்பு, பெண்களுக்கு உரிமை என அடுக்கடுக்கான சாதனைகள் செய்தவர் கலைஞர்.

திருவள்ளுவர் தமிழின் அடையாளம். குமரியில் வள்ளுவருக்கு 133அடி உயர சிலைய வைத்து அனைவரையுன் அன்னாந்து பார்க்க வைத்தவர் கலைஞர். பெரியார் சொன்னார், அண்னா நிறைவேற்றினார், கலைஞர் தொடர்ந்தார், தளபதி தொடர்ந்தார், உதயநிதி எடுத்து செல்லும் பணியை தொடர்கிறார். நாடாளுமன்றம், சட்டமன்றம் நாற்காலிகளை அலங்கரிக்கூடியது அல்ல, குரல்களை உரக்க ஒலிக்க வைக்கும் இடம். ஆதிதிராவிடர்களை அர்ச்சகர்களாக்கி கருவறைக்கு செல்ல வைத்திருக்கிறது என்றால், இதுதான் திராவிட மாடல் என்றார்.

banner

Related Stories

Related Stories