தமிழ்நாடு

உயர்நீதிமன்ற வளாகத்தில் அர்ஜுன் சம்பத் மகன் கைது! : வெறுப்பு பேச்சு சர்ச்சையானதையடுத்து நடவடிக்கை!

உயர்நீதிமன்ற வளாகத்தில் அர்ஜுன் சம்பத் மகன் கைது! : வெறுப்பு பேச்சு சர்ச்சையானதையடுத்து நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

வெறுப்பு பேச்சு பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜியை சென்னை உயர்நீதிமன்ற வளாக நுழைவுவாயிலில் கைது செய்ததது தமிழ்நாடு காவல்துறை.

மூத்த இதழியலாளர் நக்கீரன் கோபாலுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் பிணை கேட்டு அவர் தாக்கல் செய்த மனு நேற்று (நவம்பர் 13) விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்புக் கேட்பதாக ஓம்கார் பாலாஜி சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, மன்னிப்புக் கேட்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை எனவும் தாமாக மன்னிப்புக் கேட்க விரும்பினால் மன்னிப்புக் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதாக நீதிபதி கூறினார்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் அர்ஜுன் சம்பத் மகன் கைது! : வெறுப்பு பேச்சு சர்ச்சையானதையடுத்து நடவடிக்கை!

இதற்கு தாமாக மன்னிப்பு கேட்காத ஓம்கார் பாலாஜி தரப்பில், அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, ஓம்கார் பாலாஜியின் பேச்சை எழுத்து வடிவமாக சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

மேலும், கால அவகாசம் நிறைவடையும் வரை ஓம்கார் பாலாஜியை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ஓம்கார் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, விசாரணைக்குப் பின்னர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை உயர்நீதிமன்ற வளாக நுழைவுவாயிலில் காவல்துறை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஓம்கார் பாலாஜியை காவல்துறையினர் கோவைக்கு அழைத்து சென்றனர்.

banner

Related Stories

Related Stories