கர்நாடகத்திலிருந்து உத்தரப்பிரதேசத்தை நோக்கி இரும்பு லோடு ஏற்றி சென்ற சரக்கு ரயில் தெலங்கானாவில் ராகவாபுரம் மற்றும் ராமகுண்டம் இடையே சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இன்று நள்ளிரவுவில் திடீரென சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
கிராண்ட் ட்ரஙக் ரூட் என சொல்லப்படும் டெல்லி-சென்னை முக்கிய ரயில் வழித்தடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு அப்பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வடமாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள் வந்தடைய தாமதம் ஏற்பட்டுள்ளது.விரைவு ரயில் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், தினம் ஒரு ரயில் விபத்து என்ற அளவில் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு உரிய கவனம் செலுத்தி ரயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.