அரசியல்

‘ஆளில்லாத கடைக்கு டீ!’ : இல்லாத மக்களுக்கு, கையசைத்து நன்றி தெரிவித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்!

‘ஆளில்லாத கடைக்கு டீ!’ : இல்லாத மக்களுக்கு, கையசைத்து நன்றி தெரிவித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் பெருவாரியான துறைகளின் மீது, மக்கள் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, நிதித்துறை, கல்வித்துறை, உள்துறை, பாதுகாப்புத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட துறைகள் உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்கு, நிதித்துறையின் அதிகப்படியான வரி விதிப்பு, மாநில நிதிப்பகிர்வில் பாரபட்சம் உள்ளிட்ட நடவடிக்கைகள்; கல்வித்துறையின் பொதுக்கல்வி என்கிற பெயரில் மாநில கல்வியை ஒடுக்கும் முறை, உழைக்கும் மக்களின் மருத்துவ, பொறியியல் கனவுகளை சிதைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள்; உள்துறையின் சிறுபான்மையின வஞ்சிப்பு, காரணமற்ற கைதுகள், ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள்; பாதுக்காப்புத்துறையின் அலட்சியம் மற்றும் பாரபட்சம் நடவடிக்கைகள்; வேளாண் துறையின் விவசாய வஞ்சிப்பு, குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்காமல், கடன் சுமையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகளாய் அமைந்துள்ளன.

‘ஆளில்லாத கடைக்கு டீ!’ : இல்லாத மக்களுக்கு, கையசைத்து நன்றி தெரிவித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்!

இவ்வரிசையில் தவிர்க்க முடியாத இடம் பிடித்த துறை தான், இந்திய ரயில்வே துறை. அதன் அமைச்சராக விளங்கும் அஸ்வினி வைஷ்னவ் தலைமையில், இந்திய வரலாற்றில் காணப்படாத அளவிற்கு ரயில் விபத்துகளும், இயந்திர கோளாறுகளும், காவிமயமாக்கலும், நிதி ஒதுக்குவதில் வஞ்சிப்பு நடவடிக்கைகளும் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக, திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், மோடி செல்ஃபி மையம் என்று, ரயில்வே துறை செலவிட்ட தொகை ஏராளம். இதனால், மக்கள் ரயில்வே துறையின் தலைமை பொறுப்பாளரான அஸ்வினி வைஷ்னவ் மீது கடுமையான சினம் கொண்டுள்ளனர்.

அதற்கு, எடுத்துக்காட்டாக தான், நேற்றைய (நவம்பர் 3) நிகழ்வு அமைந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், வரவேற்க ஆளில்லாமல் தவித்து வந்ததும், ஆளில்லாத ரயில் நிலையத்திற்கு கையசைத்து நன்றி தெரிவித்ததுமான நிகழ்வு தான் அது.

இதுவே, ரயில்வே துறையின் அமைச்சருடைய நிர்வாக தோல்வியின் வெளிக்காட்டுதல் என்று அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories