தீபஒளித் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட தொடர் விடுமுறையை அடுத்து, சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பெருவாரியான மக்கள் சென்றனர்.
அதற்கு வழிவகுத்துத் தரும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்துத்துறையினாலும், கூடுதலாக சுமார் 1000 சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் சேவைக்கு கொண்டுவரப்பட்டன.
மேலும், தனியார் பேருந்துகளிலும் அரசு பேருந்துகளின் கட்டணத் தொகை அளவை நிர்ணயம் செய்து, மக்களின் நிதிச் சுமையை போக்கியது தமிழ்நாடு அரசு.
இதனால், போக்குவரத்திற்கு ஆகும் செலவு கணிசமாக குறைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பேருந்து அதிகரிப்பால் மக்களுக்கான போக்குவரத்து சேவையும் இடரின்றி நடைபெற்றது.
இந்நிலையில், சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பிய மக்கள் அளித்த பேட்டியில், “தீபஒளித் திருநாள் விடுமுறைக்கு பிறகு சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்ப போக்குவரத்து கழகம் சிறப்பாக பேருந்துகள் ஏற்பாடுகள் செய்துள்ளது. விரைவாக பேருந்துகள் கிடைத்தன. போக்குவரத்து இடையூறுகள் இல்லாத வகையி, அரசின் முயற்சி சிறப்பாக அமைந்தது” என தெரிவித்துள்ளனர்.