அரசியல்

சட்டவிரோத பண பரிவத்தனை : அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை !

சட்டவிரோத பண பரிவத்தனை : அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அடுக்குமாடி குடியிருப்பு வழங்கிய விவகாரத்தில் தனியார் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதற்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் 27.90 கோடி ரூபாய் பணத்தை திட்ட அனுமதி வழங்குவதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அமைச்சராக இருந்தபோது மூன்று வருடமாக சிஎம்டிஏவில் திட்ட அனுமதி வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த கட்டுமானத்திற்கு வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தில் இருந்து 27.90 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றது விசாரணையில் தெரியவந்தது. நேரடியாக பெற்றால் சர்ச்சையாக விடும் என்ற அடிப்படையில் தனது மகன் மற்றும் உறவினர்கள் நடத்தும் நிறுவனம் மூலமாக இந்த லஞ்சத்தை வாங்கியதும் தெரியவந்தது

சட்டவிரோத பண பரிவத்தனை : அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை !

இதுபோன்று நிறுவனங்களின் ஆவணங்கள் அனைத்தும் சிஎம்டிஏ தலைவராகவும் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கத்திற்கு எதிராக லஞ்சம் வாங்கியது உறுதிப்படுத்துவதன் அடிப்படையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது

இதை எடுத்து லஞ்சம் கொடுத்த ஸ்ரீராம் குழும நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் ரமேஷ், லஞ்சம் வாங்கிய முன்னால் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், அதற்கு உடந்தையாக இருந்த பாரத் கோல் பிரைவேட் லிமிடெட், அபிநயா ப்ராஜெக்ட் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் சாஸ்வதா ரெனிவல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் விநியோக டிஸ்ட்ரிபியூஷன் சர்வீஸ் லிமிடெட் மற்றும் அமைச்சரின் 2 மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு மற்றும் உறவினர் பன்னீர்செல்வம் ஆகியோர் இயக்குனர்கள் பெயரிலும் அவர்கள் நடத்தும் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் என 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள்...

இந்த நிலையில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி தற்பொழுது வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்ற விடுதி அலுவலகத்தில் உள்ள வைத்தியலிங்கம் அறையிலும் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories