அரசியல்

பாலியல் வழக்கு : முன்னாள் MP பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் மனு தள்ளுபடி : கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி !

பாலியல் வழக்கு : முன்னாள் MP பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் மனு தள்ளுபடி : கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடகா மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் (JDS) எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். அதன்பின்னரும் அவரை தேர்தலில் போட்டியிட பாஜக அனுமதித்தது. பெண்களின் பாதுகாவலர்கள் நாங்கள் என்று சொல்லும் பா.ஜ.க எப்படி, இப்படி ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது? என்ற கேள்வியும் எழுந்தது.

பாலியல் வழக்கு : முன்னாள் MP பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் மனு தள்ளுபடி : கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி !

இதையடுத்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரம் காட்டியது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூரு விமானநிலையத்தில் வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.

இதனிடையே இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா தனித்தனி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories