அரசியல்

ஜார்க்கண்ட் : JMM கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்கள்... பாஜகவுக்கு பெரும் பின்னடைவு !

ஜார்க்கண்ட் மாநில பாஜகவில் இருந்து முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 2 எம்.எல்.ஏக்கள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் : JMM கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்கள்...  பாஜகவுக்கு பெரும் பின்னடைவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநில சட்டப்பேரவையில் ஆயுள்காலம் டிசம்பர் மாதத்தோடு முடிவடையவுள்ளது. இதன் காரணமாக அந்த இரு மாநிலங்களுக்கும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன் படி மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 13-ம் மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஜார்க்கண்ட் : JMM கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்கள்...  பாஜகவுக்கு பெரும் பின்னடைவு !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக ஹேமந்த் சோரன் செயல்பட்டுவருகிறார். இங்கு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக வெகு தீவிரமாக உள்ளது. ஆனால் இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ், இடதுசாரிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில பாஜகவில் இருந்து முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான லூயிஸ் மராண்டி உள்ளிட்ட 2 எம்.எல்.ஏக்கள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்துள்ளனர். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories