அரசியல்

மதரஸா பள்ளிகளை மூட நடவடிக்கை... பாஜக மாநில அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு !

மதரஸா பள்ளிகளை மூட நடவடிக்கை... பாஜக மாநில அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மதரஸா மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும், மதரஸா பள்ளிகளை மூட வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலங்களுக்கு பரிந்துரைத்து கடிதம் எழுதியிருந்தது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து உத்திரபிரதேசம், திரிபுரா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் மதரஸா பள்ளி மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மதரஸா பள்ளிகளை மூட நடவடிக்கை... பாஜக மாநில அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு !

அந்த மனுவில் இத்தகையை நடவடிக்கை சிறுபான்மையினருக்கு எதிரானது மட்டுமின்றி அவர்களின் உரிமையை மீறும் செயல் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுபான்மையினர் நடத்தக்கூடிய பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு தடை விதித்து உத்தரவுவிட்டது. மேலும் இதனை செயல்படுத்த உத்தரவிட்ட உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories