அரசியல்

கடந்த 5 ஆண்டில் மட்டும் ரயில் விபத்தில் 351 பேர் பலி : RTI மூலம் அம்பலமான பாஜக அரசின் அவலம் !

கடந்த 5 ஆண்டில் மட்டும் ரயில் விபத்தில் 351 பேர் பலி : RTI மூலம் அம்பலமான பாஜக அரசின் அவலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ரயில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 20 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளது.

ரயில் விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒன்றிய பாஜக ஆட்சியில், நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 200 பெரும் ரயில் விபத்துக்குகள் நிகழ்ந்துள்ளதும், இதில் 351 பேர் உயிரிழந்ததும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

கடந்த 5 ஆண்டில் மட்டும் ரயில் விபத்தில் 351 பேர் பலி : RTI மூலம் அம்பலமான பாஜக அரசின் அவலம் !

சமூக ஆர்வலர் விவேக் பாண்டே தகவல் அறியும் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு, ரயில்வே துறை அளித்துள்ள பதிலில், நாடு முழுவதும் கடந்த 2019-20 முதல் 2023-24 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், 200 பெரும் ரயில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்குகளில் 351 பேர் உயிரிழந்தனர். 970 பேர் காயமடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் ஏற்பட்ட 10 பெரும் விபத்துகளில் 297 பேர் உயிரிழந்தனர். 637 பேர் காயடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories