கர்நாடகம் மாநிலம் மைசூருரிலிருந்து நேற்று காலை புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழியே பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலானது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டை பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
மெயின் லயனில் சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென அங்கேயுள்ள லூப் லைனுக்கு மாறிய நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்பிறமாக மோதியதால் இந்த பெரும் விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான பாக்மதி விரைவு ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ள நிலையில் அதில் 7 பெட்டிகள் தண்டவாளத்திற்கு குறுக்கே தடம்புரண்டன. அதில் 3 பெட்டிகள் தண்டவாளத்தை தாண்டி தரம்புரண்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்புப்பணியில் களமிறங்கிய பயணிகளை மீட்டனர்.
இதில் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமானயில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட பயணிகள் மின்சார ரயில் மற்றும் அரசு பேருந்துகள் மூலம் சென்னை சென்ட்ரல் அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில் அதிகாலை 4.45 மணிக்கு தர்பங்கா புறப்பட்டு சென்றனர். விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த பகுதியில் ரயில் போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு மீட்புபணிகள் நடைபெற்று வருகிறது. கவரைப்பேட்டை விபத்து குறித்து கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள சென்னை மண்டல உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 044-25354151 மற்றும் 044-2435499 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம் என்று ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.