அரசியல்

அரைமணி நேரத்தில் மாறிய முடிவுகள்... முடிவுகளை வெளியிட தாமதம் செய்வதாக தேர்தல் ஆணையம் மீது காங். புகார் !

அரைமணி நேரத்தில் மாறிய முடிவுகள்... முடிவுகளை வெளியிட தாமதம் செய்வதாக தேர்தல் ஆணையம் மீது காங். புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஹரியானா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக சார்பில் முதலமைச்சராக நவாப் சிங் சைனி உள்ளார். ஹரியானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியோடு சட்டமன்றத்தின் ஆயுள் முடிவடையவுள்ளது.

இதன் காரணமாக ஹரியானாவில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக காலையில் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் இருந்தது.

அரைமணி நேரத்தில் மாறிய முடிவுகள்... முடிவுகளை வெளியிட தாமதம் செய்வதாக தேர்தல் ஆணையம் மீது காங். புகார் !

ஆனால் காலை 9.30 மணி அளவில் சில நிமிடங்களிலேயே முடிவுகள் மாறி பாஜக முன்னிலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு தொகுதிகளில் முடிவுகளை வெளியிட தாமதம் செய்வதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, “ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 11ம் சுற்று முடிந்த பிறகும் பல தொகுதிகளில் 4வது, 5வது சுற்று எண்ணிக்கை நிலவரத்தைதான் தேர்தல் ஆணைய இணையதளம் காட்டிக் கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் நேரடி நிலவரம் தொடர்ந்து பதிவேற்றப்படுகிறது. ஆனால் ஹரியானா நிலவரங்களில் தாமதம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories