அரசியல்

திருப்பதி லட்டில் கலப்படம் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆந்திர முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !

திருப்பதி லட்டில் கலப்படம் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?   ஆந்திர முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருப்பதி லட்டில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “திருப்பதி லட்டு சர்ச்சையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை முடிவு வெளிவரும் வரை பொறுமை காக்காமல் ஏன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு பத்திரிகையாளர் சந்திப்பில் அது தொடர்பாக தெரிவிக்க வேண்டும் ?

திருப்பதி லட்டில் கலப்படம் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?   ஆந்திர முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !

இந்த விவகாரம் எனபது கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை சார்ந்தது. இதில் அரசியல் செய்ய கூடாது. கலப்பட நெய்தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதா என்பது உறுதி படுத்தப்படவில்லை.இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஏன் பத்திரிகை சந்திப்பில் இந்த விவகாரத்தை தெரவிக்க வேண்டும் ?

புகார் எழுந்தால் அனைத்து நிறுவன நெய்களும் சோதிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போதைய நிலையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் நெய் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது ? திருப்பதி லட்டு விவகாரத்தில் முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வருகிறது ஆனால் செப்டம்பர் மாதம் அறிக்கையை வெளியிடுகிறீர்கள் அது ஏன் ?

நீங்கள் ஒரு அரசியல் சாசன அலுவலகத்தை கையில் வைத்திருக்கிறீர்கள். கடவுளை நீங்கள் அரசியலில் இருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும் இவை தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடிய ஒன்று” என்று கருத்து தெரிவித்தனர். மேலும், லட்டு விவகாரத்தில் ஆந்திரா அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டுமா? வேறு குழு அமைக்க வேண்டுமா? என்பது குறித்து முடிவு எடுக்க வழக்கு 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories