அரசியல்

மும்பை பல்கலைக்கழக செனட் தேர்தல் : பாஜகவை Wash Out செய்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா !

மும்பை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அனைத்து இடங்களையும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கைப்பற்றியுள்ளது.

மும்பை பல்கலைக்கழக செனட் தேர்தல் : பாஜகவை Wash Out செய்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது.

அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

பின்னர் சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்ததில், அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக கூட்டணியில் இணைந்தனர். இதனிடையே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றது பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக அமைந்தது.

மும்பை பல்கலைக்கழக செனட் தேர்தல் : பாஜகவை Wash Out செய்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா !

இந்த நிலையில் தற்போது மும்பை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அனைத்து இடங்களையும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கைப்பற்றியுள்ளது. மும்பை பல்கலைக்கழகத்தோடு சேர்ந்திருக்கும் 850 கல்லூரிகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் இதில் வாக்களித்திருப்பதால் இந்தத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த தேர்தலுக்கு கீழமை நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், அத்தடையை மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நீக்கியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் தேர்தலின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்து இடங்களையும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் மும்பை தனது கோட்டை என்பதை உத்தவ் தாக்கரே நிரூபித்துள்ளார். விரைவில் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories