அரசியல்

அஜித்பவார் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னத்தை முடக்கவேண்டும் : சரத்பவார் அணி வழக்கு !

அஜித்பவார் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை முடக்கி அவருக்கு வேறு சின்னம் வழங்கவேண்டும் என்று சரத்பவார் அணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அஜித்பவார் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னத்தை முடக்கவேண்டும் : சரத்பவார் அணி வழக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்த சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு மாற்றி அதன் மூலம் ஆட்சியை பாஜக கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.

எனினும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மஹாராஷ்டிராவில் அதிக இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னங்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையிலும் இந்தியா கூட்டணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

supriya sule
supriya sule

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அஜித்பவார் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை முடக்கி அவருக்கு வேறு சின்னம் வழங்கவேண்டும் என்று சரத்பவார் அணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய சரத்பவார் மகளும்ம் சரத்பவார் அணியின் எம்.பியுமான சுப்ரியா சுலே, “நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க இரு அணிகளுக்கும் புதிய சின்னம் ஒதுக்கப்பட வேண்டும். எங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கிவிட்ட நிலையில் அதே போன்று மற்ற அணிக்கும் புதிய சின்னம் ஒதுக்கப்படவேண்டும்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories