உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் சந்திரசூட். டெல்லியில் உள்ள இவரது வீட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வழிபாடு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சந்திரசூட் - பிரதமர் மோடிக்கும் இருக்கும் பந்தம் என்ன என்று கேள்வி எழுப்பி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிவசேனா தலைவர் (உத்தவ் தாக்கரே பிரிவு) நிர்வாகி சஞ்சய் ராவத், ”விநாயகர் சதுர்த்தி என்பதால், பிரதமர் மோடி, தலைமை நீதிபதியின் வீட்டிற்குச் சென்று வழிபாடு செய்திருக்கிறார். அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர், அரசியல்வாதிகளை சந்தித்தால், அது மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தும்.
மகாராஷ்டிராவில் ஒரு சட்டவிரோத அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதுதொடர்பாக நாங்கள் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் நடந்து வருகிறது, எனவே இந்த வழக்கில் பிரதமர் மற்றொரு தரப்பினராக இருப்பதால் எங்களுக்கு நீதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.
எங்களுக்கு நீதி வழங்க வேண்டிய தலைமை நீதிபதிக்கும், பிரதமருக்கும் ஒரு பந்தம் இப்பதால், எங்கள் வழக்கில் இருந்து தலைமை நீதிபதி சந்திரசூட் விலக வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.