அரசியல்

"மக்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்வது நல்லதுதான்" - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத் !

"மக்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்வது நல்லதுதான்" - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் 2006 ஆம் ஆண்டு ’கேங்ஸ்டர்” படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த அவர் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்த அவருக்கு, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார். அதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை வீழ்த்தி எம்.பி.யாக தேர்வானார்.

அதன் பின்னர் விமான நிலையத்தில் வைத்து விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய கங்கனா ரனாவத்தை மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் கன்னத்தில் அடித்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

"மக்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்வது நல்லதுதான்" - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா ரனாவத் !

தொடர்ந்து சமீபத்தில், விவசாயிகள் போராட்டத்தை வங்கதேச போராட்டத்துடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கினார். அவரது பேச்சுக்கு அவரின் சொந்த கட்சியான பாஜகவே கடும் கண்டனம் தெரிவித்து, இது போன்ற பேச்சுகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது .

இந்த நிலையில், தற்போது கங்கனா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்வது குறித்த கங்கனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாகிவிட்டதால், மக்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்வது நல்லதுதான்"என்று கூறியுள்ளார். இதன் மூலம் மோடி ஆட்சியில் இங்கு இருப்பதை விட வெளிநாடு செல்வதே சிறந்தது என கங்கனா கூற வருகிறாரா என்ற நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories