அரசியல்

முதியவரை தாக்கிய குண்டர்களுக்கு ஒரே நாளில் பிணை! : மகாராஷ்டிரத்தில் புறக்கணிக்கப்பட்ட நீதி!

NDA கூட்டணி ஆட்சி புரியும் மகாராஷ்டிரத்தில் சிறுபான்மையின முதியவரை தாக்கியவர்களுக்கு சார்பாக வழக்கை கையாண்ட காவல்துறையும், நீதிமன்றமும்.

முதியவரை தாக்கிய குண்டர்களுக்கு ஒரே நாளில் பிணை!  : மகாராஷ்டிரத்தில் புறக்கணிக்கப்பட்ட நீதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆகஸ்ட் 28ஆம் நாள், ஜல்கவுன் மாவட்டத்திலிருந்து கல்யாண் என்கிற பகுதிக்கு, தனது மகளை காண சென்ற ஹஜி அஷ்ரஃப் என்கிற முதியவரை, மாட்டிறைச்சி எடுத்துச்சென்றார் என 7 குண்டர்கள் கடுமையாக தாக்கினர்.

தாக்கியதோடு மட்டுமல்லாமல், அதனை காணொளியாகவும் படம் பிடித்தனர். அக்காணொளி இணையத்தில் வெகுவாக பரவி, தேசிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்தது.

இதனையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான முதியவர் அஷ்ரஃப் காவல்துறையினரிடம் ஆகஸ்ட் 31 அன்று, இறைச்சி எடுத்துச்சென்றதற்காக தாக்கிய 7 பேர் மீது புகார் அளித்தார்.

அப்போது, தன்னை அவர்கள் கொல்லத் திட்டமிட்டதாகவும், கல்யாண் பகுதியில் இறங்க அனுமதிக்கவில்லை என்றும், தன்னிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டதாகவும் புகார் அளித்தார்.

ஆனால், புகாரை ஏற்றுக்கொண்ட மகாராஷ்டிர காவல்துறை, அக்குண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய ஒப்புக்கொள்ளாமல், பிணை கிடைக்கும் வகையில் வழக்குப்பதிவு செயத்தது.

மேலும், இது தொடர்பான விசாரணையின் போது, தாக்குதல் நடத்தியவர்கள் காவல் பணிக்கான தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்பியதும் அம்பலமானது. இதனால், மக்களை காக்கும் துறைகளில், வெறுப்பு உமிழ்பவர்கள் இணையப் போகிறார்களா என்ற எதிர்ப்பும் வெகுவாக பரவத்தொடங்கின.

இந்நிலையில், குண்டர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ததற்கு அடுத்த நாளே (செப்டம்பர் 1), ரூ. 15,000 அபராதத்துடன் பிணை வழங்கி உத்தரவிட்டது மகாராஷ்டிர நீதிமன்றம்.

சிறுபான்மையின முதியவரை தாக்கியவர்கள் மீது இந்திய ஒன்றியத்தின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரே கண்டனம் தெரிவித்தும், அவர்களுக்கு பிணை வழங்கியது கூடுதல் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

ஒரு முதியவரிடம் பணம் பறித்து, கொலை முயற்சியில் ஈடுபட்டாலும் அதிகாரத்தின் மணம், தாக்குதல் நடத்தியவர்கள் சார்ந்து தான் இருக்கிறது என்ற கண்டனங்களும், குண்டர்களுக்கு தரப்பட்ட பிணைக்கு பிறகு வலுக்கத்தொடங்கியுள்ளன.

banner

Related Stories

Related Stories