பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் புல்டோசர்களை கொண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் கொடூரம் தற்போது அதிகரித்துள்ளது.
இதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை பா.ஜ.க ஏற்படுத்த முயற்சிக்கிறது. தற்போது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்படுகிறது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்படுகிறது. 50,60 ஆண்டுகள் வாழ்ந்து வரும் வீடுகள் கூடு இடிக்கப்படுகிறது என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அப்போது, பல ஆண்டு குடியிருந்த வீடுகளை திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிப்பது ஏன்? என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் சார்பில் ஆஜரான ஒன்றிய அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் புல்டோசர் பயன்படுத்தும் விவகாரம் குறித்து அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தும் விதமாக நாடு தழுவிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.