அரசியல்

புதுச்சேரியில் அமலுக்கு வந்தது மின்கட்டண உயர்வு : மாநில அரசை மீறி கட்டணத்தை உயர்த்திய ஒன்றிய அரசு !

புதுச்சேரி அரசின் கோரிக்கையை, இணை ஒழுங்குமுறை மின்சாரம் ஆணையம் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில், புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது

புதுச்சேரியில் அமலுக்கு வந்தது மின்கட்டண உயர்வு : மாநில அரசை மீறி கட்டணத்தை உயர்த்திய ஒன்றிய அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி புதுச்சேரியில் வீடு, வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது. ஆனால் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அரசியல்கட்சிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக மின் கட்டண உயர்வை மறுபரீசிலனை செய்ய வேண்டுமென இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில், கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு எந்தவித மாற்றமும் இல்லாமல் அமலுக்கு வருகின்றது.

இதற்கான பொது அறிவிப்பினை புதுச்சேரி மின் துறை தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி வீடுகளுக்கு தற்போது முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாய் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தற்போது ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் 3.25 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அமலுக்கு வந்தது மின்கட்டண உயர்வு : மாநில அரசை மீறி கட்டணத்தை உயர்த்திய ஒன்றிய அரசு !

இதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.40 ரூபாய் மின்கட்டணத்திற்கு பதிலாக ரூ.6 வசூலிக்க உயர்த்தப்பட்டுள்ளது. 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் 6.80 ரூபாயில் இருந்து 7.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல்வர்த்தக பயன்பாட்டில் உள்ள உயர் மின் அழுத்த(எச்.டி.,) லைன் கட்டணம் தற்போது யூனிட்டுக்கு 5.60 ரூபாயில் இருந்து, 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த அழுத்த தொழிலகங்களுக்கான கட்டணத்தை 6.35 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் 11 கே.வி.,22 கே.வி.,அல்லது 33 கே.வி.,இணைப்பினை பெற்றுள்ள எச்.டி.,தொழிற்சாலைளுக்கான கட்டணம் 5.45 ரூபாயில் இருந்து 6 ரூபாய்க்கும்,110 கேவி.,132 கே.வி,மின் இணைப்புகளை பெற்றுள்ளஇ.எச்.டி.,தொழிற்சாலைகளுக்காக கட்டணம் 5.50 ரூபாயில் இருந்து 6.35 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.எலக்ட்ரீக் வாகனங்களுக்கான சார்ஜ் ஸ்டேஷன்களுக்கான மின்கட்டணம் முன்பு யூனிட்டிற்கு 5.33 ரூபாய் இருந்தது. இது 5.75 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருவதாக மின்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories