அரசியல்

ஜம்மு காஷ்மீரின் 90 தொகுதிகளில் 60-ல் மட்டுமே போட்டி ? தோல்வி பயம் காரணமாக பாஜக முடிவு !

90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள ஜம்மு காஷ்மீரில் 60 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் 90 தொகுதிகளில் 60-ல் மட்டுமே போட்டி ? தோல்வி பயம் காரணமாக பாஜக முடிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கு நடந்த ஆட்சியை பாஜக கவிழ்த்த நிலையில், ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. இதனை சாதகமாக வைத்து காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் தனியே பிரிக்கப்பட்டது.

அதோடு ஜம்மு காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டமும் பறிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறாத நிலை நிலவி வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அங்கு அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஜம்மு காஷ்மீரிலுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் செப்.18, 25 மற்றும் அக்.1-ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை இந்தியா கூட்டணி ஒரே அணியாக எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் 90 தொகுதிகளில் 60-ல் மட்டுமே போட்டி ? தோல்வி பயம் காரணமாக பாஜக முடிவு !

அதே நேரம் கூட்டணிக்கு ஆள் இல்லாத நிலையில், பாஜக தனித்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த நிலையில், 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள ஜம்மு காஷ்மீரில் 60 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் , ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு பகுதியில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்றும் , மோசமான தோல்வியை தவிர்க்க காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் குறைவாக தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் பாஜக வெறும் 60 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்காக 44 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை இன்று காலை வெளியிட்ட பாஜக திடீரென அதனை திரும்ப பெற்றுள்ளது. சொந்த கட்சியிலேயே பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வேட்பாளர்கள் பட்டியலில் திரும்பப் பெறப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories