அரசியல்

வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடரும் பா.ஜ.க.வின் அவசரத்தனம் : நீடிக்கும் பா.ஜ.க.வின் இரட்டிப்பு மனநிலை!

வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடரும் பா.ஜ.க.வின் அவசரத்தனம் : நீடிக்கும் பா.ஜ.க.வின் இரட்டிப்பு மனநிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தல் அறிவிப்புகள் வெளியானதும், முதலில் முந்திக்கொண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதும் பா.ஜ.க தான், வெளியிடும் பட்டியலை திரும்பப்பெருவதும் பா.ஜ.க தான்.

அவ்வாறு, அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அரங்கேறியதை, மீண்டும் நிகழ்த்தி காட்டியிருக்கிறது பா.ஜ.க.

மக்களவை தேர்தலின் போது, பா.ஜ.க வெளியிட்ட வேட்பாளர்கள் பலர் சர்ச்சைக்குரியவர்களாய் அமைந்தனர். பாலியல் வழக்கில் சிக்கியவர்கள், ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் அல்லது மாற்றுக்கட்சியிலிருந்து பதவிக்காக பா.ஜ.க.விற்கு தாவியவர்களுக்கு முன்னுரிமை தந்தது பா.ஜ.க. இதனால், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், உட்கட்சியிலும் மோதல்கள் தொடர்ந்தன.

இதனையடுத்து, வேட்பாளர்கள் போட்டியிடுவதிலிருந்து விலகுவதும், பா.ஜ.க தலைமையினால் விலக்கப்படுவதும் அரங்கேறியது.

வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடரும் பா.ஜ.க.வின் அவசரத்தனம் : நீடிக்கும் பா.ஜ.க.வின் இரட்டிப்பு மனநிலை!

இந்நிலையில், தற்போது அதுபோன்ற மற்றொரு நிகழ்வு, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பிற்கு பிறகும் நடக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி, 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான 44 வேட்பாளர்களை வெளியிட்ட பா.ஜ.க, சில மணிநேரத்தில் அறிவித்த வேட்பாளர் பட்டியலை திருமப்பெற்றது.

பிறகு 44இலிருந்து 15ஆக குறைக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பா.ஜ.க. திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டும், பா.ஜ.க.வினரின் அதிருப்தி தீர்ந்த பாடில்லை.

ஜம்மு - காஷ்மீரில் பா.ஜ.க.விற்காக தொடக்கம் முதல் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தராமல், மற்ற கட்சியிலிருந்து அண்மையில் பா.ஜ.க.வின் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜம்மு - காஷ்மீர் பா.ஜ.க அலுவலகத்தில் பா.ஜ.க.வினரே முழக்கமிட்டனர்.

இதனால், பா.ஜ.க.வின் தலைமையும் குழம்பி போய், என்ன செய்வது என்று தெரியாமல், இரட்டை மனநிலையில் தவித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories