அரசியல்

ஆபரேஷன் தாமரை : "ரூ.100 கோடி தருவதாக பாஜக பேரம் பேசியது" - கர்நாடக காங்கிரஸ் MLA பேட்டி !

ஆபரேஷன் தாமரை திட்டத்தை கர்நாடகாவில் செயல்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

ஆபரேஷன் தாமரை : "ரூ.100 கோடி தருவதாக பாஜக பேரம் பேசியது" - கர்நாடக காங்கிரஸ் MLA பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநில சட்டப்பேரவை கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது .

பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிதரும் பணத்தை வைத்து தங்கள் கட்சியில் இணைக்கும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கர்நாடகாவில் செயல்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

Congress MLA Ravikumar
Congress MLA Ravikumar

இது குறித்துப் பேசிய கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் , "கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க தலா ரூ50 கோடி முதல் ரூ100 கோடி வரை பாஜக தரப்பு பேரம் பேசி வருகிறது. இதன் மூலம் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஆபரேஷன் தாமரையை பாஜக கையில் எடுத்துள்ளது.

என்னையும் தொலைபேசியில் அழைத்து பேரம் பேசினார்கள். ஆனால், ரூ100 கோடியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டேன். என்னைப் போலவே பாஜகவின் இந்த பேரத்தை ஏற்க எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் முன்வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் 136 எம்.எல்.ஏக்களும் பாறை போல முதல்வர் சித்தராமையாவுக்கு பின்னால் ஆதரவாக நிற்கிறோம்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories